தற்போதைய செய்திகள்

கரோனா: இந்தியாவில் பலி 1,2948; பாதிப்பு 3,95,048 -ஆக உயர்வு

20th Jun 2020 09:43 AM

ADVERTISEMENT


இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 375 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,948 -ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 14516 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,95,048 -ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 9-ஆவது நாளாக பெரிய அளவில்14,516 -க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. 

இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,68,269 போ் சிகிச்சையில் உள்ளனா். 2,13,831 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT