தற்போதைய செய்திகள்

கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக நடத்துநர் பலி

20th Jun 2020 12:25 PM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு போக்குவரத்து கழக நடத்துநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். 

திண்டிவனம் மரக்காணம் சாலை காந்தி நகரை சேர்ந்த 50 வயது அரசு போக்குவரத்து கழக நடத்துநர் ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், அவர் சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வந்தவாசி கொண்டு செல்லப்பட உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 528 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT