தற்போதைய செய்திகள்

இந்தியா - சீனா வீரர்கள் இடையிலான மோதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழப்பு:  அமெரிக்க உளவுத்துறை தகவல்

17th Jun 2020 11:21 AM

ADVERTISEMENT

இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி உள்பட சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா்.

இந்த மோதலில் சீன தரப்பில் பலியானோா் மற்றும் காயமடைந்தோா் எண்ணிக்கை 43 என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி உள்பட சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

சீன வீரர்கள் உயிரிழப்பு குறித்து அந்நாடு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT