தற்போதைய செய்திகள்

லடாக்கில் உயிரிழந்த வீரருக்கு வீர வணக்கம்

17th Jun 2020 10:58 AM

ADVERTISEMENT


லடாக்கில் வீரமரணமடைந்த 20 வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.  

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பாஜக மாநிலசெயற்குழு உறுப்பினர் டி.ஜெயானந்த் தலைமையில் லடாக்கில் வீரமரணமடைந்த 20 வீரர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் தியாகராஜன், நகர தலைவர் கார்த்திக், நகர பொது செயலாளர் உதயக்குமார், இராஜேந்திரன், சபரிராஜா முருகேசன், எஸ்.கார்த்தி ராகுல் ஜெகன், சமூக ஆர்வலர் சிவக்குமார் உள்ளிட்டோர் வீரமரணமடைந்த தியாகி பழனியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT