தற்போதைய செய்திகள்

வங்கியின் கண்ணாடி கதவு மீது மோதிய பெண் பலி

17th Jun 2020 08:33 AM

ADVERTISEMENT


பெரும்பாவூர்: வங்கி ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவர், அங்கு கண்ணாடி கதவு மூடிருப்பதை உணராமல் வேகமாக மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

கேரளம் மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீனா பவுல்(43) பெரும்பாவூரில் உள்ள வங்கி ஒன்றுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளார். வங்கிக்குள் இருந்த அவர், காரில் ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காக வேகமாக வெளியே ஓடிச் சென்றிருக்கிறார். 

அப்போது வங்கியின் கண்ணாடி கதவு மூடப்பட்டிருப்பதை உணராத பீனா பவுல் வேகமாக மோதியதில், கண்ணாடி கதவுகள் துண்டு துண்டாக உடைந்து சிதறியது. அதில் உடைந்த கண்ணாடி துண்டுகள் பீனா பவுலின் தலை மற்றும் வயிற்று பகுதியில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை அங்கிருந்தவர்கள், வங்கி பணியாளர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.  இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பீனா பவுல். புதன்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ADVERTISEMENT

பதற்றம், அவசரத்தால் பெண் ஒருவர் பலியான சம்பவம் அந்த காட்சியை பார்த்தோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT