தற்போதைய செய்திகள்

திமுக இலக்கிய அணி இணைச்செயலர் வி.பி. கலைராஜனுக்கு கரோனாவா?

17th Jun 2020 10:46 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை தியாகராய நகர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருமான வி.பி.  கலைராஜன், தமக்கு கரோனா தொற்று இல்லை என மறுத்துள்ளார்.

வி.பி. கலைராஜனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் புதன்கிழமை காலையில் ஊடகங்களில் செய்திகள் பரவின.  அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்  தகவல்கள் பரவின.

எனினும், தமக்குத் தொற்று இல்லை என்றும் நலமாக வீட்டில்தான் இருப்பதாகவும் தற்போது வி.பி. கலைராஜன் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT