கோவை: சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வந்த 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை கோவை வந்தவர்களுக்கு விமான நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம், காட்பாடி ரயிலில் வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவையை சேர்ந்த 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கருமத்தம்பட்டி சோதனைச் சாவடி வழியாக சென்னையில் இருந்து வந்த கோவையைச் சேர்ந்த 6 பேருக்கும், எகிப்த்தில் இருந்து கேரள வழியாக கோவை வந்த புதுக்கோட்டையை சேர்ந்தவருக்கு வாளையார் சோதனைச் சாவடியில் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் கோவையில் 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.