தற்போதைய செய்திகள்

மோடி உண்மையைத் தெரிவிக்க முன்வர வேண்டும்: ராகுல் சுட்டுரை

DIN

பிரதமர் நரேந்திர மோடி மறைந்துகொண்டு அமைதியாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் நடைபெற்ற ராணுவ  மோதலில் அவர் உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி சுட்டுரையில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, கல்வான் பள்ளத்தாக்கில் 20 ராணுவத்தினர் உயிரிழக்கக் காரணமான மோதல் பற்றிய உண்மை நிலைமையை வெளிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்?, எதனால் அவர் மறைந்துகொண்டிருக்கிறார்?, எல்லாம் போதும்,  என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம். எவ்வாறு நம்முடைய வீரர்களை சீனா கொன்றது?, நம்முடைய நிலத்தை அவர்கள் கைப்பற்றினார்கள்? என்று சுட்டுரையில் தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.

மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக ஒரு விடியோவொன்றையும் சுட்டுரையில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, ஒட்டுமொத்த நாடும் பிரதமர் நரேந்திர மோடியுடன் நிற்கும் என்றும் அவர் முன்வர வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

"நாட்டின் துணிச்சலான தியாகிகளுக்கு என் வீரவணக்கம்"  என்று  இந்த  விடியோவுக்குத் தலைப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

27 வினாடிகளே ஓடும் இந்த விடியோவில், "இரு நாள்களுக்கு முன்னர், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்திவிட்டனர். தங்கள் குடும்பங்களிடமிருந்து அவர்கள் பறிக்கப்பட்டுவிட்டனர். நிலத்தை இந்தியாவிடமிருந்து சீனா பறித்துக்கொண்டுவிட்டது. பிரதமரே ஏன் அமைதியாக இருக்கிறீர்கள், ஏன் மறைந்துகொண்டிருக்கிறீர்கள், வெளியே வாருங்கள், ஒட்டுமொத்த நாடும், நாங்கள் அனைவரும், உங்களுடன் இணைந்து நிற்கிறோம். இந்த நாடு உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறது. வெளியே வாருங்கள், நாட்டுக்கு உண்மையைச் சொல்லுங்கள், அஞ்சாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT