தற்போதைய செய்திகள்

திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் ஏ. வைத்தியநாதன் மறைவு

11th Jun 2020 12:13 PM

ADVERTISEMENT

 

கோவை: இந்திய அரசின் திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினரான முனைவர் ஏ. வைத்தியநாதன், கோவையில் புதன்கிழமை பின்னிரவில் காலமானார்.

சென்னை மேம்பாட்டுக் கல்வி நிறுவனம், திருவனந்தபுரம் மேம்பாட்டுக் கல்வி மையம் ஆகியவற்றில் பேராசிரியராகவும் பணியாற்றியவர் வைத்தியநாதன்.

சென்னை லயோலா கல்லூரி மாணவரான இவர், அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பயனீட்டுப் பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சிலில் முன்னாள் நிதித்துறை அமைச்சர் அசோக் மித்ரவுடன் இணைந்து பணியாற்றியவர் வைத்தியநாதன்.

ADVERTISEMENT

1962 முதல் 72 வரை திட்டக் குழுவில் திட்டமிடுதலுக்கான பிரிவில் வைத்தியநாதன் செயலாற்றியுள்ளார். 

வைத்தியநாதனுக்கு மனைவி, இரு மகள்கள் இருக்கின்றனர்.

Tags : Dr Vaidyanathan passes away Planning Commission டாக்டர் வைத்தியநாதன் திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் OBIT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT