தற்போதைய செய்திகள்

வந்தவாசி: இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

10th Jun 2020 01:50 PM

ADVERTISEMENT


கரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள கோவில்களை திறக்கக் கோரி வந்தவாசி பகுதியில் இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.

வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவில், ரங்கநாத பெருமாள் கோவில், தேரடி வழித்துணை விநாயகர் உள்ளிட்ட கோவில்களின் முன் ஒற்றைக் காலில் நின்று இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் ஆறுமுகம், மாவட்டச் செயலர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT