தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும்: தமாகா கோரிக்கை

10th Jun 2020 01:02 PM

ADVERTISEMENT


சிதம்பரம்: தமிழகத்தில் குறைந்த அளவில், உள்ளூர் பக்தர்கள் வழிபடும் வகையில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள மனு: கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு 75 நாட்களை முடிவடைந்துள்ளது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மேலும் ஜூன் 8-ஆம் தேதி முதல் வணிகவளாகங்கள், உணவு விடுதிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களையும் திறக்கலாம் என அறிவித்தது. அனைத்து வழிபாட்டு தலங்கள் வாயில்களில் கிருமிநாசினி, தெர்மல் ஸ்கேனிங் வைக்க வேண்டும் என்றும், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், வழிபாட்டு தலங்களில் சமூக இடைவெளியை பயன்படுத்த வேண்டும், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் தடை என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கேரளத்தில் சபரிமலை, குருவாயூர் உள்ளிட்ட பிரபல வழிபாட்டு ஸ்தலங்களை உள்ளூர் பக்தர்களை மட்டும் அனுமதி சமூக இடைவெளியை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆந்திரத்தில் திருப்பதி கோவில் திறக்கப்பட்டு சமூக இடைவெளியை பயன்படுத்தி உள்ளூர் பக்தர்கள் மட்டும் வழிபடி அனுமதித்து ஜூன் 8-ஆம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது. அதுபோன்று தமிழகத்தில் முக்கிய கோவில்களான சிதம்பரம் நடராஜர் கோவில், பழனி பாலதண்டாயுதபாணி கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய ஆலயங்களில் மக்கள் வழிபட தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். 

ADVERTISEMENT

மேற்கண்ட ஆலயங்களில் உள்ளூர் பக்தர்களை சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் சென்று வழிபட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். கரோனா தொற்று ஊரடங்கில் மனஅழுத்தம் அடைந்த மக்களுக்கு கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனஅழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என மனுவில் எம்.என்.ராதா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT