தற்போதைய செய்திகள்

திருச்சியில் 80 நாள்களுக்குப் பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது

10th Jun 2020 11:31 AM

ADVERTISEMENT


திருச்சி:  பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திருச்சியிலிருந்து 80 நாள்களுக்குப் பிறகு மீண்டும் புதன்கிழமை முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.

மண்டலத்துக்குள் மட்டுமே இயக்கப்பட்டதால் திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டுமே இயங்கின. இதனால், பிற மண்டலங்களுக்கு செல்ல வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டது. 

கரோனா பரவுதலை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. 5ஆவது கட்டமாக அறிவிக்கப்பட்ட முடக்கத்தில் அரசுப் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. எனினும், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. 

இந்த நிலையில், புதன்கிழமை முதல் தனியார் பேருந்துகளும் இயங்கத் தொடங்கியுள்ளன. 

ADVERTISEMENT

திருச்சி மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்துநிலையங்களுக்கு காலை முதலே பேருந்துகள் கொண்டுவரப்பட்டன. ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி போதிய அறிவுரைகள் வழங்கி அவரவர் வழித்தடம் செல்லுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

பின்னர், சமூக இடைவெளியுடன் பயணிகளை ஏற்றி மண்டலத்துக்குள் மட்டுமான போக்குவரத்து தொடங்கியது. 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முதல்நாள் இயக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT