தற்போதைய செய்திகள்

ரஷியாவில் கரோனா பாதிப்பு 4.6 லட்சத்தை கடந்தது

7th Jun 2020 04:12 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4.6 லட்சத்தை கடந்தது. அங்கு கூடுதலாக 8,984 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,67,673-ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு 134 பேர் பலியானதை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 5,859 உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,26,731பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT