தற்போதைய செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு: கோவையில் மக்கள் சாலை மறியல்

7th Jun 2020 11:23 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் தொடங்குவதற்காக, காலியாக உள்ள 992 வீடுகளை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலமாக
இடித்து அகற்றும் பணியை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், மாற்று வீடுகள் வழங்கும் வரை, அந்த வீடுகளை இடிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி, அப்பகுதியினர் 200- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் முத்தண்ணன் குளக்கரையில் வசித்து வரும் 1,500 வீடுகளைச் சேர்ந்தவர்களைக் காலி செய்யுமாறு, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில், 992 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, மலுமிச்சம்பட்டி, கீரணத்தம் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டதால், அந்த வீடுகளில் வசித்தோர், 
அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். 

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தினர், காலியாக உள்ள 992 வீடுகளை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலமாக
இடித்து அகற்றும் பணியை சனிக்கிழமை தொடங்கினர். 200 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீதமுள்ள வீடுகளை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றனர். அப்போது, 992 வீடுகளுடன், காலி செய்யப்படாத வீடுகளையும் இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முயற்சிப்பதாகவும், மாற்று வீடுகள் வழங்கும் வரை, அந்த வீடுகளை இடிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி, அப்பகுதியினர் 200- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மற்றும் காவலர்கள், மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மறியல் காரணமாக, அப்பகுதியில் 2 மணி நேரமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT