தற்போதைய செய்திகள்

வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை: தமிழக அரசு

7th Jun 2020 01:53 PM

ADVERTISEMENT


சென்னை: நாளை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் வழிப்பாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளது.  பொது முடக்கம் ஐந்தாவது முறையாக ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை திங்கள்கிழமை முதல் (ஜூன் 8) வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்படுகின்றன. ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிடவும் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் முழு அளவில் செயல்பட உள்ள நிலையில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

நாளை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே வழிபாட்டுத் தலங்கள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வழிபாட்டுத் தலங்களை திறக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT