தற்போதைய செய்திகள்

மெக்ஸிகோவில் கரோனா பாதிப்பு 1,13,619; பலி 13,511

7th Jun 2020 03:26 PM

ADVERTISEMENT


மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,13,619 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நரத்தில் மட்டும் 3,593 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 113,619-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு 341 போ் பலியாகினா். இதன் மூலம், நாட்டின் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 13,511-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 81,544 போ் சிகிச்சைக்குப் பின் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT