தற்போதைய செய்திகள்

கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 5-ம் இடத்தில் இந்தியா!

7th Jun 2020 04:29 PM

ADVERTISEMENT


கரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் இத்தாலியை விஞ்சி 5-ஆவது இடத்துக்கு இந்தியா வந்துள்ள நிலையில், தொடா்ந்து நான்காவது நாளாக, நாட்டில் 9,971-க்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 9,971 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதால், நாட்டில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,46,628-ஆக அதிகரித்துள்ளது. இதே கால அளவில் 287 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 6929-ஆக அதிகரித்துள்ளது. 5,220 பேர் குணமடைந்துள்ளனர். நோய்த்தொற்றிலிருந்து மொத்தம் 1,19,293 போ் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உலக அளவில் கரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில், இத்தாலி மற்றும் ஸ்பெயினை பின்னுக்‍கு தள்ளி, இந்தியா, 6-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்திற்கு விஞ்சி உள்ளது. தற்போது அமெரிக்கா, பிரேசில், ரஷியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்‍கது.

ADVERTISEMENT

மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் பியூரிடன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியா, சீனாவில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனையை அதிகரித்தால் அந்நாடுகளில் அமெரிக்காவைவிட நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவரும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பேசியது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT