தற்போதைய செய்திகள்

தம்மம்பட்டியில் வயதான மாமனாரை பார்க்க வந்த மருமகனுக்கு கரோனா

7th Jun 2020 12:19 PM

ADVERTISEMENT


தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டியிலுள்ள வயதான மாமனாரைப் பார்க்க வந்த மருமகனுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டி வடக்குக்காட்டுக்கொட்டாய்யில்  80 வயதான பெரியவர், தனது மனைவியுடன் வசித்து வருகின்றார். இவர்களது மகள் கணவருடன் சென்னை மேடவாக்கத்தில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில், வயதான தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவரைப் பார்க்க, தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மொத்தம் 8 பேருடன், வெள்ளிக்கிழமை காலை சென்னையிலிருந்து தம்மம்பட்டி நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது மாவட்ட எல்லையான தலைவாசலில், அனைவரது உடல்வெப்பநிலை  மட்டும் பார்த்துள்ளனர். பின்னர், அனைவரும் தம்மம்பட்டி அரசு ஆரம்பசுகாதார  நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்துகொள்ள தலைவாசல் பரிசோதனை மையத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து சென்னையிலிருந்து வந்த 8 பேருக்கும், தம்மம்பட்டியில் கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்யப்பட்டது. அதன்பின்னர், அவர்கள் கோனேரிப்பட்டி சென்று, வயதான தம்பதியை பார்த்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், 8 பேரின் பரிசோதனை அறிக்கை சனிக்கிழமை பிற்பகல் வந்தது. அதில், 80 வயதான பெரியவரின் மருமகனுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. அதனையடுத்து 8 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கும், தனிமைப்படுத்தலுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபற்றி சுகாதாரத்துறையினர் கூறும்போது, இன்னும் 7 நாளுக்குப் பின்னர், அந்த வயதான தம்பதிக்கும் கரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்படும் என்றனர்.

கோனேரிப்பட்டியில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி முழுவதும் சனிக்கிழமை பிற்பகலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், தடுப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT