தற்போதைய செய்திகள்

திருப்பூரில் பெண்ணைக் கொலை செய்த இளைஞர் கைது

4th Jun 2020 12:13 PM

ADVERTISEMENT

திருப்பூரில் 50 வயது பெண்ணைக் கொலை செய்த 22 வயது இளைஞரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கர்நாடகம் மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி லட்சுமி (50). இவர் திருப்பூர் பாண்டியன் நகர் அருகில் உள்ள அண்ணா நகரில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தனியாக வசித்து வந்தார். அதே பகுதியில் கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே வசித்து வந்த பூபதி(22), புதன்கிழமை நள்ளிரவு லட்சுமியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் தனியாக இருந்த அவரை கற்பழிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் பூபதியைத் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த பூபதி அருகில் இருந்த தோசைக்கல்லை எடுத்து லட்சுமியின் தலையில் போட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். 

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த திருமுருகன்பூண்டி காவல் துறையினர் லட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய பூபதியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT