தற்போதைய செய்திகள்

வைகாசி விசாகத்திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது

4th Jun 2020 01:00 PM

ADVERTISEMENT


கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத்திருவிழாவன்று பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக திருச்செந்தூரில் பத்து நாட்கள் நடைபெறும். ஆனால் நிகழாண்டில் கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் வைகாசி வசந்த திருவிழா மற்றும் விசாகத் திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாததால் கோவில் வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது. 

திருக்கோயில் பூஜை நடைமுறைகளை செயல் அலுவலர் சா.ப.அம்ரித் தலைமையிலான பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT