தற்போதைய செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்  ரூ. 2,564 கோடி அளவிற்கு பயிர் கடன்

4th Jun 2020 11:38 AM

ADVERTISEMENT


திருச்சி:  டெல்டா மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் மூலம், நடப்பாண்டில் ₹ 2,564 கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கப்படவுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். 

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக  நீர் திறப்பதை முன்னிட்டு,  டெல்டா மாவட்டங்களில் பயிர் கடன் இடுபொருள்கள்,  உர விநியோகம் தொடர்பாக, மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்டா மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் ரூ.3.88 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு குறுவை சாகுபடிக்குத் தேவையான 29 ஆயிரத்து 889 மெட்ரிக் டன் யூரியா, டி.ஏ.பி,  எம்.ஒ.பி,  காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் இருப்பில் உள்ளன. 

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கோவிட்- 19 சிறப்பு நிதி உதவி திட்டத்தின் மூலம்,  5 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 64 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 74 ஆவது கிளையாக பொன்மலைப்பட்டி களை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT