தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டை சிறுமி நரபலி வழக்கு: பெண் மந்திரவாதி கைது

4th Jun 2020 09:23 AM

ADVERTISEMENTபுதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் சிறுமியின் உறவினர் முருகாயி கைது செய்யப்பட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா விராலிப்பட்டி அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் வசிக்கும் பன்னீர் இந்திரா இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி காலை 7 மணி அளவில் தண்ணீர் எடுப்பதற்காக சற்று தொலைவில் உள்ள ஊற்று குளத்திற்கு சென்றுள்ளார் வித்யா. நீண்ட நேரமாகியும் மகளை காணாததால் பெற்றோரும் உறவினர்களும் தேடி வந்தனர். ஊற்று குளத்திற்கு அருகே உள்ள தைல மரக் காட்டில் தாயார் இந்திரா தேடி சென்று போய் பார்க்கும்போது மகள் வித்யா காயங்களுடனும் மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டு இருந்துள்ளார்.

மகளின் பரிதாப நிலையை கண்ட தாயார் இந்திரா அலறி அடித்து கூக்குரலிட்டது உறவினர்களும் பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவி வித்தியாவை மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார், மேலும் கந்தர்வகோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். 

மேலும் சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில் உடற்கூர் ஆய்வில் சிறுமி பலத்காரம் செய்யப்படவில்லை என தெரிய வந்ததை தொடர்ந்து காவல்துறையின் விசாரனை சிறுமியின் தந்தை பன்னீர் செல்வம் மீது திரும்பியது. விசாரணையில் மகளை நரபலி கொடுத்தால் சொத்து பணம் சேரும் என மந்தரவாதி கூறியதாகவும், அதனால் மகளை நரபலி கொடுத்ததாக தந்தை மற்றும் உறவினர் குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

ADVERTISEMENT

மந்திரவாதியின் பேச்சை கேட்டு தந்தையே பெற்ற மகளை கொன்ற செயல் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய பெண் மந்திரவாதியான புதுக்கோட்டையைச் சேர்ந்த வசந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த முருகாயி ஆகியோர் மீது கந்தர்வகோட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்து வந்த இரண்டு பேரையும் பேரையும் தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சிறுமியின் உறவினர் முருகாயி ஆகியோரை தனிப்படை காவலர்கள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT