தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு 

4th Jun 2020 12:08 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லை சோதனைச்சாவடியை கண்காணிப்பு குழு அதிகாரிகள் உட்பட உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். 

பிற மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் கரோனா நோய் அறிகுறியுடன் யாரும் வந்து விடாமல் தடுப்பதற்காக மாவட்டத்தின் எல்கையான செட்டி பேடு, வரதராஜபுரம், சிறுகளத்தூர், மண்ணிவாக்கம் ஆகிய 4 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகளில் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பிற மாவட்டங்களில் இருந்து கார்களில் அல்லது வேறு ஏதேனும் வாகனங்களில் காஞ்சிபுரத்துக்கு நோய்த்தொற்று இருப்பவர்கள் வந்து விடாத வகையில் இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் அனுமதிபெற்று வருகிறார்களா என்பன போன்ற விவரங்களை ஆவணங்கள் ஆக்கி அனுமதிக்கப்பட வேண்டிய நபர்களை மட்டும் அனுமதிக்கிறார்கள். அவ்வாறு வருபவர்களில் யாருக்கேனும் கரோனா நோய்த்தொற்று இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். 

ADVERTISEMENT

இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக செய்கிறார்களா என தமிழ்நாடு தேர்தல் வரையறை ஆணையத்தின் உறுப்பிர் செயலர் சுப்பிரமணியன், கடலோரக் காவல்படை டிஐஜி தேன்மொழி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நா. சுந்தரமூர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, தாசில்தார் ரமணி, ஸ்ரீபெரும்புதூர் எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஆய்வின்போது உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT