தற்போதைய செய்திகள்

சேலம் மாவட்டம் மேச்சேரியில் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

4th Jun 2020 10:56 AM

ADVERTISEMENT


காவல் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள மேச்சேரி இந்தியன் வங்கி ஏடிஎம்மில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி சாம்ராஜ் பேட்டையில் இந்தியன் வங்கி உள்ளது. வங்கியை ஒட்டி ஏடிஎம் அறை அமைக்கப்பட்டுள்ளது. மேச்சேரி காவல் நிலையத்திற்கு சில மீட்டர் தூரத்திலேயே இந்த ஏடிஎம் மையம் உள்ளது. வியாழக்கிழமை அதிகாலை ஏடிஎம் இயந்திர அறையில் நுழைந்த இரண்டு இளைஞர்கள் கடப்பாறையை கொண்டு இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். அப்போது அவ்வழியாக மேச்சேரி நெடுஞ்சாலை ரோந்து காவலர் வாகனம் வந்துள்ளது. வங்கியின் ஏடிஎம் அலாரமும் ஒலிக்கத் துவங்கியது. மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மேச்சேரி காவலருக்கு தகவல் அளித்துள்ளனர். வங்கியின் சைரன், நெடுஞ்சாலை ரோந்து வண்டியின் சைரன் ஆகியவற்றால் அச்சமடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். புதன்கிழமை காலை கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து மேச்சேரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள ஏடிஎம்மில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT