மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் வட்ட செயலாளர் எம்.கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கரோனா பாதிக்கப்பட்டுள்ள காலங்களில் விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் ரூ.7,500 வழங்கிட வேண்டும், 100 நாள் வேலையினை 200 நாட்களாக அதிகரித்து கூலியை ரூ.600-ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், மகளிர் சுய உதவிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச்செயலாளர் என்.ராஜகோபால் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், விவசாய சங்க நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.