தற்போதைய செய்திகள்

பிளஸ் 1 தேர்வு: மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம்

31st Jul 2020 03:05 PM

ADVERTISEMENT

பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 97.90 சதவீதம் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 214 பள்ளிகளில் 22,600 மாணவ மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில் 10,010 மாணவர்கள், 12,116 மாணவிகள் என மொத்தம் 22,126 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் 97.90 ஆகும். இதன் மூலம் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் 97.41 சதவீதம் பெற்று மாநில அளவில் ஆறாம் இடத்தைப் பெற்றிருந்தது. தற்போது இரண்டாம் இடத்தை பெற்றிருப்பதால் கல்வியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : virudhunagar
ADVERTISEMENT
ADVERTISEMENT