ஜெருசலேம்: இஸ்ரேலில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 455 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தொற்று உலகம் முழுவதும் 213 நாடுகளுக்கு மேல் பரவி முடக்கிப்போட்டுள்ளது. உலக அளவில் கரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறது.
உலக அளவில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 12,075 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,62,02,385 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 843 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6,48,445 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 455 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளிட்டுள்ள அறிவிப்பில், நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 1,021 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 60,496 ஆக வந்துள்ளன. அதே கால அளவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ஒட்டுமொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 455 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 26,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 33,160 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 312 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.