தற்போதைய செய்திகள்

ஆண்டிபட்டி சாலையோர வியாபாரிகளுக்கு திமுக சார்பில் நிவாரணம்

25th Jul 2020 11:58 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சாலையோர வியாபாரிகளுக்கு திமுக சார்பில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் சனிக்கிழமை நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

ஆண்டிபட்டி நகரில்  உள்ள வேல்மணி வணிக வளாகம் முன்பாக ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பேரூராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மேலும், ஒவ்வொருவருக்கும் 2 முக கவசங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம், மாவட்ட நெசவாளர் அணி ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் வளர்மதி மகாராஜன், நிர்வாகிகள் செஞ்சுரி செல்வம், பூஞ்சோலை சரவணன், மணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT