தற்போதைய செய்திகள்

அதிபராக  இருக்கும் வரை ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன்: டிரம்ப்

8th Jan 2020 11:02 PM

ADVERTISEMENT

 

வாஷிங்டன்: நான் அமெரிக்க அதிரபராக  இருக்கும் வரை, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,  வெள்ளை மாளிகையில் சில நிமிடங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அமெரிக்க ராணுவ தளத்திற்கு மிக குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்பட்டுள்ளது, இதுவரை எந்த அமெரிக்கரும் இதனால் பாதிப்படையவில்லை. அமெரிக்க படைத்தளத்தில் உள்ள வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.  அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. அணு ஆயுதம் செய்வதை ஈரான் கைவிடவேண்டும்.  

ADVERTISEMENT

மத்திய கிழக்கு நாடுகளில் நேட்டோ படை அதிக மும்முரத்துடன் செயல்பட அழைக்கிறேன், அமெரிக்கா சக்திவாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. எங்களிடம் பெரிய ராணுவ பலமும், ஆயுதங்களும் உள்ளது என்பதற்காக அதைப் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. நாங்கள் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை. அமெரிக்கா அமைதியை விரும்புகிறது. ஈரான் மக்களுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும். 

உள்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஈரான் பயங்கரவாதத்தை வளர்த்துவருகிறது. அணு ஆயுதத்திட்டங்களை ஈரான் கட்டாயமாக கைவிட வேண்டும்.  நான் அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு அயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன்.

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. உள்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது.  உலகத்திற்கே அச்சுறுத்தலாக ஈரான் இருந்து வரும் ஈரான் மீதான தடைகள் மேலும் அதிகரிக்கப்படும்.  உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT