தற்போதைய செய்திகள்

நாகர்கோவில் அருகே சோகம்: ஆற்றில் குளிக்க சென்ற நகைக் கடை அதிபரும், நண்பரும்  நீரில் மூழ்கி பலி  

8th Jan 2020 07:41 PM

ADVERTISEMENT

 

நாகர்கோவில்:  நாகர்கோவில் அருகே ஆற்றில் குளிக்க சென்ற நகைக் கடை அதிபர் நீரில் மூழ்கி  உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற நண்பரும் பலியான சம்பவம் அந்த பகுயில்  பெருமி் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாகர்கோவில் சேர்ந்தவர் பிரவின் குமார் வியாஸ் (47) இவர் நகைகளை மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இவரது நண்பர் லலித் (35) இவர்கள் இருவரும்  இன்று நாகர்கோவிலை அடுத்த மேல கருப்பு கோட்டை கிராமத்தில் பழைய ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, பிரவின் குமார் வியாக்ஸ் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது அவரது கால் சகதியில் சிக்கி கொண்டது. இதனால் அவரால் கரைக்கு திரும்ப முடியாத நிலையில் தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லலித் தனது நண்பரை காப்பாற்ற தண்ணீருக்குள் வேகமாக நீந்தி சென்றார். அவரும் அதே சகதியில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தார். 

நண்பர்கள் இருவரும் ஒரே நேரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுல்ளது.  

ADVERTISEMENT

இது குறித்து தகவல் அறிந்த நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

இதுகுறித்து கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நவடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT