தற்போதைய செய்திகள்

9 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு 

3rd Jan 2020 11:23 AM

ADVERTISEMENT


ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 9 மாவட்டங்களில் நிறைவு பெற்றுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக டிச. 27, 30 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள் நேற்று ஜன. 2 (வியாழக்கிழமை) எண்ணப்பட்டன. தோ்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வந்த நிலையில், தூத்துக்குடி, தேனி, திருச்சி, கரூர், திருவாரூர், கோவை, நீலகிரி, நாமக்கல் மற்றும் கன்னியாகுமாரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT