தற்போதைய செய்திகள்

108 ஆம்புலன்சில் பிரசவத்துக்கு சென்ற பெண்ணுக்கு வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது

3rd Jan 2020 03:00 PM

ADVERTISEMENT

ஆம்பூர் அருகே 108 ஆம்புலன்சில் பிரசவத்துக்காக சென்றவருக்கு வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது. 

திருப்பத்தூர் மாவட்டம், கீழ் மிட்டாளம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் மனைவி சோனியா 108 ஆம்புலன்சில் பிரசவத்துக்காக எடுத்துச்செல்லும் வழியில் பிரசவ வலி ஏற்பட்டதால், ஆம்புலன்சை சின்னவரிகம் ஊராட்சி ரகுநாதபுரம் வயல்வெளிப் பகுதியில் நிறுத்தி பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு பெண்கள் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT