தற்போதைய செய்திகள்

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிட்பட்ட 2  ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது

3rd Jan 2020 11:51 AM

ADVERTISEMENT


விராலிமலை: விராலிமலை, அன்னவாசல் ஒன்றியங்களில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலில் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 2  ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது.

கடந்த டிச, 27 -ம் தேதி நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலில் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட 21 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு திமுக சார்பில் 19 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிட்டன.அதேபோல் அதிமுக 20 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக ஒரு இடத்திலும் போட்டியிட்டன

இந்நிலையில், கடந்த 27 -ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் எண்ணிக்கை விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது நள்ளிரவு வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 12 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது.  

இதேபோல் 5 இடத்தில் அதிமுகவும் ஒரு இடத்தில் தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அதிமுகவில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்ட 2 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் அன்னவாசல் ஒன்றியத்தில் 10  இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதேபோல் 9 இடங்களில் அதிமுக பெற்றி பெற்றுள்ளது. 

இதன்முலம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட விராலிமலை, அன்னவாசல் ஆகிய 2  ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT