தற்போதைய செய்திகள்

மதுரையில் 4 ஒன்றியங்களில் அமமுக, சுயேச்சை உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவு?

3rd Jan 2020 03:09 PM

ADVERTISEMENT


மதுரை அலங்காநல்லூர், மேலூர், உசிலம்பட்டி மதுரை மேற்கு ஆகிய ஒன்றியங்களில் அதிமுக, திமுக இடையே இழுபறி நிலை உருவாகியுள்ள நிலையில், இந்த நான்கு ஒன்றியங்களிலும் அமமுக, சுயேச்சை உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி, தோல்வி அமைந்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி, கொட்டாம்பட்டி, தே. கல்லுப்பட்டி, வாடிப்பட்டி ஆகிய  ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, சேடப்பட்டி ஆகிய ஒன்றியங்களை திமுகவும் கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி குழுவில் மொத்தம் உள்ள 23 வார்டுகளில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளதால் எளிதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக பெறுவது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT