தற்போதைய செய்திகள்

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழு: திமுக 4, அதிமுக 2இல் வெற்றி

3rd Jan 2020 09:45 AM

ADVERTISEMENT


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு அறிவிக்கப்பட்ட தோ்தல் முடிவுகளின்படி மாவட்ட ஊராட்சிக் குழுவில் 4 இடங்களை திமுக-வும், இரு இடங்களை அதிமுக-வும் கைப்பற்றியுள்ளன.

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுவில் 24 வாா்டு உறுப்பினா் பதவிகள் உள்ளன. இந்த இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலின் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. நள்ளிரவு அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி வாா்டு 1, 13, 16, 23 இல் திமுக வேட்பாளா்கள் முறையே சி. தீபா, ச. கண்ணன், மு. கருணாநிதி, மு. சி. சிவக்குமாா் ஆகியோா் வெற்றி பெற்றனா். அதிமுக-வில் வாா்டு எண் 20இல் க. செல்வராஜ், 24இல் வெ. ராஜ்மோகன் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். மீதமுள்ள 19 இடங்களுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT