தற்போதைய செய்திகள்

திருவள்ளூர்: 2 ஒட்டு சீட்டுகள் மாயம் - எகுமதுரை ஊராட்சி எண்ணிக்கையில் பரபரப்பு

2nd Jan 2020 12:16 PM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட எகுமதுரை ஊராட்சிக்கு 2வது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் இரு வாக்குகள் எண்ணிக்கையின் போது மாயமானதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எதுமதுரை ஊராட்சிக்கு 4வாக்கு சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 2வது வாக்கு சாவடியில் வாக்கு பதிவின்போது 421வாக்குகள் பதிவானது.

ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது அந்த வாக்கு சாவடி வாக்குகளில் 421க்கு பதிலாக 419 வாக்கு சீட்டுகளே இருந்தது. 

ADVERTISEMENT

தொடர்ந்து மாயமான 2 வாக்கு சீட்டுகள் குறித்து வேட்பாளர்களும் அவர்களது முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்திய உதவி தேர்தல் அலுவலர் ஜாகிர் உசேன் அனைத்து வாக்குகளும் எண்ணி முடித்த பிறகு அந்த 2வாக்குகள் குறித்து பேசி முடிவெடுக்கலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து வேட்பாளர்கள் சமாதானமடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT