தற்போதைய செய்திகள்

ஜன.2: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

2nd Jan 2020 07:41 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் இன்று வியாழக்கிழமை(ஜன.2) பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.78.20 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.71.98 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகின்றன. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து இன்று லிட்டருக்கு 08 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.20 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து இன்று லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.71.98 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

2020 ஆம் ஆண்டின் இரண்டாவது தினமான இன்று பெட்ரோல் லிட்டருக்கு 08 காசுகளும், டீசல் லிட்டருக்கு 12 காசுகளும் அதிகரித்துள்ளது வானக ஓட்டிகள், வணிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.22 ஆகவும், டீசல் ரூ.66.14 ஆகவும் விற்பனையாகி வந்த நிலையில், கடந்த 12 மாதங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6.90, டீசல் லிட்டருக்கு  ரூ.5.72  அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT