தற்போதைய செய்திகள்

கொடைக்கானலில் 17 தபால் வாக்குகளும் செல்லாது என அறிவிப்பு

2nd Jan 2020 10:49 AM

ADVERTISEMENT


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் மற்றும் நிலக்கோட்டை ஒன்றியம் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டு வாக்குகளைப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளும் பிரிக்கப்பட்டு வருகின்றன

இதனிடையே,  கொடைக்கானலில் 17 தபால் வாக்குகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஏஜென்டுகள் அனுமதிப்பதில் தாமதம் காரணமாக வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்படாமல் உள்ளன. சார் ஆட்சியர் உமா தலைமையிலான அதிகாரிகள் வாக்கு பெட்டி வைக்கப்பட்ட இடத்தில் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT