தற்போதைய செய்திகள்

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி : திரளானவர்கள் பங்கேற்பு

26th Feb 2020 02:15 PM

ADVERTISEMENT


வேளாங்கண்ணி: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். 

இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். 

ADVERTISEMENT

கிறிஸ்துவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் துவங்கியது. இதையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலை நடைபெற்றது. 

பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்காலம் சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பின்னர் கிறிஸ்துவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் பிரபாகர் சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT