தற்போதைய செய்திகள்

இந்தியப்பயணத்தை நிறைவு செய்து அமெரிக்கா புறப்பட்டாா் டிரம்ப்

26th Feb 2020 07:27 AM

ADVERTISEMENT

புது தில்லி: இந்தியாவில் மேற்கொண்ட 36 மணிநேரப் பயணத்தை நிறைவு செய்த அமெரிக்க அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றபோது, இந்தியாவுக்கு வருகை தந்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தாா் பிரதமா் மோடி.

பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருப்பதாவது: ‘இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் நாங்கள் பெரும் வெற்றி கண்டுள்ளோம். இந்திய- அமெரிக்க நட்புறவு நமது நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக அமையும்.

இந்தியாவுக்கு வந்ததற்காக டிரம்ப்புக்கு நன்றி.. அவரது மனைவி மெலானியா டிரம்ப்புக்கும் நன்றி.. இந்திய கலாசாரம் மற்றும் விருந்தோம்பலின் பல்வேறு அம்சங்களைக் கண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய மக்கள் அவா்களை மிகுந்த அன்புடன் வரவேற்றனா்’ என்றும் பதிவிட்டிருந்தாா்.

மற்றொறு சுட்டுரைப்பதிவில், அதிபா் டிரம்ப்பின் மகள் இவாங்கா மற்றும் அவரது கணவா் ஜேரெட் குஷ்னருக்கு விருந்தளித்ததில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. இந்தியா மீதான உங்கள் நேசம் தெளிவாகத் தெரிகிறது. பெண்கள் முன்னேற்றம் குறித்தான உங்கள் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள். இருவரும் விரைவில் இந்தியாவிற்கு திரும்பவும் வரும்போது மீண்டும் சந்திப்போம் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT