தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது 

26th Feb 2020 11:59 AM

ADVERTISEMENT

 

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் இந்தியா பயணத்திற்கு பின் அமைச்சரவை கூட்டம் நடந்து வருகிறது. 

டிரம்ப் இந்திய பயணத்தின் போது, இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தின, இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தன, இந்த ஒப்பந்ததின் கீழ் அப்பாச்சி ஹெலிகாப்டா், எம்.ஹெச்.-60 ‘ரோமியோ’ ஹெலிகாப்டா் உள்ளிட்ட கூடுதல் திறன்மிக்க, ரூ.21,000 கோடிக்கும் அதிகமான பாதுகாப்புத் தளவாடங்களை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. இதன் மூலம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. 

அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் தில்லியில் தொடர் வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கமளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT

பட்ஜெட் தாக்கல் பின்னர் நடைபெற்று வரும் இரண்டாவது அமைச்சரவை கூட்டம்.  முதல் அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT