தற்போதைய செய்திகள்

ஹோலிக்கு முன்னதாக ஹப்பூரில் 144 தடை

26th Feb 2020 02:27 PM

ADVERTISEMENT

 

ஹப்பூர்:  பண்டிகை காலங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹபூர் காவல்துறை புதன்கிழமை 144  தடை உத்தரவு விதித்துள்ளது. 

உத்தர பிரதேசம் மாநிலம் ஹப்பூரில் ஹோலி மற்றும் பிற பண்டிகைகளான ராமநவமி, மகரிஷி காஷ்யப் மற்றும் மகாராஜா நிஷாத் ராஜ் ஜெயந்தி மற்றும் புனித வெள்ளி போன்றவற்றில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் கொண்டாடடுவதற்காக புதன்கிழமை (பிப்.26) முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் போலீஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT