தற்போதைய செய்திகள்

ஹைதராபாத்தில் 'விலைமதிப்புமிக்க' நாகமணி கல் - துர்கா சிலையை விற்க முயன்ற 4 பேர் கைது 

26th Feb 2020 11:23 AM

ADVERTISEMENT


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 'விலைமதிப்புமிக்க' நாகமணி கல் மற்றும் துர்கா சிலையை விற்க முயன்றதற்காக 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுதொடர்பாக ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் அஞ்சனி குமார் கூறுகையில், தேவேந்தர் என்பவர் மும்பையில் உள்ள ஒரு வியாபாரிகளிடமிருந்து 'நாகமணி கல்' ஒன்றை வாங்கி வந்தவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்தார்.

பின்னர் தேவேந்தர், ஜான் மற்றும் பிறருடன் நட்பு கொண்டபின், தன் வீட்டில் வைத்திருந்த விலைமதிப்பற்ற நாகமணி கல்லைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களும் அவர்கள் வைத்திருக்கும் சிலை பற்றி அவரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு நாகமணி கல்லுடன் சேர்ந்து சிலைகளையும் சேர்த்து விற்கப்பட்டால் அனைவருக்கும் நல்ல பெரும் தொகை கிடைக்க உதவும் என்று கூறியுள்ளனர். 

இதையடுத்து மூன்று ஆண்டுகளாக வீட்டில் மறைத்து வைத்திருந்த நாகமணி கல் மற்றும் ரூ. 1 கோடி மதிப்புள்ள துர்கா தேவியின் சிலையை கூட்டாகச் சென்று செவ்வாய்க்கிழமை விற்க முன்றுள்ளனர். 

ADVERTISEMENT

இதுகுறித்து போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, விரைந்து செயல்பட்ட போலீஸார் 'விலைமதிப்புமிக்க' நாகமணி கல் மற்றும் துர்கா சிலையை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

இதுதொடர்பாக பி.தேவேந்தர், டி ஜான், பிரேம் சந்த் குப்தா மற்றும் முகமது அஷ்ரப் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அஞ்சனி குமார் கூறினார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT