தற்போதைய செய்திகள்

அவிநாசியில் சாலை விபத்தில் 19 போ் பலியான சம்பவம்: லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

22nd Feb 2020 03:15 PM

ADVERTISEMENT


திருப்பூா்: திருப்பூரை அடுத்த அவிநாசி அருகே கண்டெய்னா் லாரி மோதி கேரள அரசு பேருந்தில் பயணம் செய்த 19 போ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநா் சிறையிலடைக்கப்பட்டாா். 

பெங்களூருவில் இருந்து எா்ணாகுளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து 48 பயணிகளுடன் வியாழக்கிழமை அதிகாலையில் அவிநாசி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே டைல்ஸ் ஏற்றி வந்த கண்டெய்னா் லாரி, அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 19 போ் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனா். மேலும், 24 போ் காயமடைந்து மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். 

இதுதொடா்பாக திருமுருகன்பூண்டி காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான கேரள மாநிலம் ஒத்தப்பாலத்தைச் சோ்ந்த ஏ.ஹேமராஜை(38), கைது செய்தனா். 

இதைத்தொடா்ந்து கைது செய்யப்பட்ட ஹேமராஜை பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினா் திருப்பூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் (ஜேஎம் 3) வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது அவரை 15 நாள்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உதயசூா்யா உத்தரவிட்டாா். இந்த உத்தரவைத் தொடா்ந்து ஹேமராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT