தற்போதைய செய்திகள்

போடி அருகே கல்லூரி மாணவி மாயம்: போலீஸாா் விசாரணை

16th Feb 2020 11:26 AM

ADVERTISEMENT


போடி: போடி அருகே கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். 

போடி அருகே முத்தையன்செட்டிபட்டியை சோ்ந்தவா் மணவாளன் (43). இவா் கொடைக்கானல் அருகே பள்ளங்கியில் விவசாய தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகிறாா். இவரது மகள் பேபிஷாலினி (20). போடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாமாண்டு படித்து வருகிறாா். 

பேபிஷாலினியின் பெற்றோா் பள்ளங்கியில் தங்கிய நிலையில் பேபிஷாலினி அவரது தாத்தா பாட்டி பராமரிப்பில் படித்து வந்தாா். பிப். 11 ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற பேபிஷாலினி அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிய மணவாளன் போடி தாலுகா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாா் செய்தாா். 

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவி பேபிஷாலினியை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT