தற்போதைய செய்திகள்

முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திடீர் சந்திப்பு

15th Feb 2020 10:00 AM

ADVERTISEMENT

 
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து பேசி வருகிறார். 

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாரைக் கண்டித்தும், இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா்.

சென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்து பேசி வருகிறார். 

ADVERTISEMENT

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக முதல்வரை சந்தித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT