தற்போதைய செய்திகள்

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம்

15th Feb 2020 12:53 PM

ADVERTISEMENT


கன்னியாகுமரி: சிஏஏ எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றகோரியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்-சென்னையில் காவல் ஆணையர் வரும் 28ஆம் தியதி வரை போராட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால் அதை மீறி நேற்று முஸ்லீம் அமைப்பினர் வண்ணாரபேட்டையில் அனுமதியில்லாமல் சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை கூறியும் போராட்டம் கைவிடப்படவில்லை. 

இந்நிலையில், காவல்துறையினர் தடியடிநடத்தி போராட்டம் கலைக்கப்பட்டது. இந்த தடியடியை கண்டித்தும் சிஏஏ எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றகோரியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT