தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் 700 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

13th Feb 2020 11:35 AM

ADVERTISEMENT


வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்திச் சென்ற 700 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.

ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை கடைவீதியில் சென்ற அசோக் லைலாண்ட் கண்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது காரில் 350 பார்சல்களாக இருந்த 700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

ADVERTISEMENT

இது தொடர்பாக வேதாரண்யம் செல்வராஜ் (54), கோடியக்காடு அய்யப்பன் (33),பரமானந்தம் (35), சென்னையைச் சேர்ந்த ரமணன் (45), தவமணி (37) ஆகிய 5 பேரை மதுரை என்சிபி  காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT