தற்போதைய செய்திகள்

ரூ.2 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யபட்ட புகையிலை பிளாஸ்டிக் பறிமுதல்

13th Feb 2020 04:17 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆவுடையார்கோவில் கடைவீதி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அப்பகுதியே வந்த வாகனத்தை சோதனையிட்ட போது வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் பிளாஸ்டிக் பைகளும் இருப்பதை கண்டு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அறந்தாங்கியிலிருந்து ஆவுடையார்கோவில் நேக்கி வந்த வாகனங்களை சோதனை செய்தபோது அறந்தாங்கி அழியாநிலை பகுதியை சேர்ந்த அரசகுமார் என்பவர் வகானத்தில் அரசால் தடைசெய்யபட்ட சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ பிளாஸ்டிக் கேரிபைகள் மற்றும் சுமார் 75 ஆயிரம் மதிப்புள்ள தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் 70 கிலோவும் பறிமுதல் செய்தனர்

ADVERTISEMENT

இது குறித்துஆவுடையார்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT