தற்போதைய செய்திகள்

நிலத்தகராறில் விவசாய கூலி தொழிலாளி வெட்டி கொலை: பெண் கொலையாளி கைது

13th Feb 2020 11:21 AM

ADVERTISEMENT


திருப்பத்தூர்: நிலத்தகராறில் விவசாய கூலி தொழிலாளி வெட்டி கொலை. அவரது மனைவி விஜயா(40) உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி கம்மகிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்த  சுப்பரமணி கவுண்டர் மகன் விவசாய கூலி தொழிலாளி முருகேசன்(55), இவரது சகோதரர் வெங்கடேசன். இவர்களுக்கு அதே பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரிப்பதில் ஏற்கனவே இருவருக்கும் இடையே 4 வருடமாக தகராறு இருந்து வந்த நிலையில், வெங்கடேசன் சித்ரா தம்பதிக்கு 4 குழந்தைகள் இருந்த நிலையில் மூன்று ஆண் குழந்தைகள் உயிரிழந்துள்ளது. ஒரு பெண் குழந்தையை மட்டும் வைத்து மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே வெங்கடேசனின் மனைவி சித்ரா மற்றும் முருகேசனின் மனைவி விஜயா ஆகியோரிடையே தகராறு இருந்து வந்த நிலையில் இன்று நள்ளிரவு நிலத்தில் உள்ள அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அரிவாளுடன் சென்ற சித்ரா,  முருகேசனின் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே முருகேசன் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். கொலை வெறி அடங்காத சித்ரா, அருகில் உறங்கிக்கொண்டிருந்த முருகேசனின் மனைவி விஜயா(40) சரமாரியாக வெட்விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு அருகில் உள்ள நிலத்தில் பதுங்கியிருந்த சித்ராவை கைது செய்தனர். 

முருகேசனின் சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.  பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முருகேசனின் மனைவி விஜயாவை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .

இதுகுறித்து உமராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ADVERTISEMENT
ADVERTISEMENT